மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடர் ஆரம்பம்!

Monday, February 24th, 2020

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் மார்ச் மாதம் 20 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்ற உள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று மற்றும் 34 இன் கீழ் ஒன்று முதலான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்ட, 40 இன்கீழ் ஒன்று என்ற தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையை விலக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதுளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: