மகிந்த-மோடி சந்திப்பு, நானே அனுமதி வழங்கினேன்  என்கிறார் ஜனாதிபதி

Wednesday, May 17th, 2017

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு எதிராக வெசாக் போயா தினத்தில் கறுப்புக்கொடி போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தவர்கள்  நள்ளிரவில் இந்தியத் தலைவரை சந்திக்கிறார்கள் இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒன்றிணைந்த எதிரணியினரை சாடியுள்ளார் .

கறுப்புக்கொடி போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கு அனுமதிக்கலாமா என்று இந்திய உயர்ஸ்தானிகரும் மோடியுடன் வந்த இந்திய உயர் அதிகாரிகளும்    தன்னிடம்   கேட்டதாகவும்   அதற்க்கு தான் ஆட்சேபம் தெரிவிக்காததாலேயே மகிந்த இந்தியப் பிரதமரை சந்திக்க முடிந்தது எனவும் ஜனாதிபதி தெரவித்தார்.

யுத்த குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை, மின்சாரக் கதிரை மற்றும் இன்னபிற முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான பல பிரச்சினைகளை இல்லாமல் செய்தவன் நான் எனவும்  ஜனாதிபதி கூறினார்.

அரலகன்விள என்கின்ற இடத்தில் காணியற்றவர்களுக்கு காணி உரிமங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாறறுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு உரையாற்றினார்.

Related posts: