பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பற்றாக்குறை!
Monday, September 4th, 2017
இலங்கைப் பொலிஸ் திணைக்களம் 1,500 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பணியில் சேர்க்க அண்மையில் பரீட்சைகளை நடத்தியதுடன் அதில் வெறும் 120 பேர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் 24,000 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஓய்வுபெறவுள்ளனர். புதிதாக பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பணியில் இணைத்து கொள்ள முடியாது போனால், பொலிஸ் திணைக்களம் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் 25 ஆண்டுகளின் பின்னரே சார்ஜன்ட் தரத்திற்கு உயர்த்தப்படுவார். இதனையடுத்து 15 வருடங்களின் பின்னர் சார்ஜன்ட் உப பொலிஸ் பரிசோதகர் பதவி தரத்திற்கு உயர்த்தப்படுவார்.
இந்த நிலைமை காரணமாக இளைஞர்கள் பொலிஸ் துறையில் இணையவதை பொரும்பாலும் விரும்புவதில்லை என்பது கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


