பொலிஸ் உத்தியோகத்தரின் மரணத்தில் சந்தேகம் – குடும்பத்தினர் தெரிவிப்பு!

Friday, July 6th, 2018

மல்லாகம் பகுதியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்தபோது துப்பாக்கி குண்டு துளைத்து உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

எமது மகன் இறந்து போன அன்று காலை எங்களுடன் தொலைபேசியில் பேசினார். தற்கொலை செய்துகொள்வதற்கு எந்தக் காரணமும் அவருக்கு இருக்கவில்லை. நல்ல மனநிலையில் தான் அவர் இருந்தார் எனவும் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சகோதரன் கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மல்லாகம் பகுதியில் சிரேஷட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த திருகோணமலை பகுதியைச் சேர்ந்த என்.நஸீர் (வயது 22) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிக் குண்டு துளைத்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையிலேயே அவரது மரணம் தொடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நஸீர் பொலிஸ் சேவையில் ஒரு வருட பயிற்சியை நிறைவு செய்த பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு நியமனம் பெற்று கடமையாற்றி வந்தார்.

சம்பவம் இடம்பெற்ற தினம் காலை எங்கள் வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு சம்பளம் எடுத்திருப்பதாகவும் அதனை வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் உம்மாவிடம் அந்த பணத்தை வங்கியில் இருந்து பெற்றுக்கொடுக்குமாறு கூறியிருந்தார் என சகோதரன் கூறினார். பின்னர் அன்று மாலை ஒரு தொலைபேசி அழைப்பு எங்களுக்கு வந்தது. உங்கள் மகன் கடமையில் இருக்கும்போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் மற்றுமொரு அழைப்பில் மகன் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு எந்த காணரமும் இல்லை. நல்ல மனநிலையில் தான் இருந்தார். இந்த மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம் நிலவுகின்றது. சிரே~;ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எம்முடன் கதைக்கும்போது அவர் தற்கொலை செய்வதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை எனக் கூறியிருந்தார். எனவே உரிய விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் என சகோதரர் தெரிவித்தார்.

Related posts: