புத்தர் சிலை வைக்கும் எண்ணம் இராணுவத்துக்கு இல்லை!
Tuesday, January 9th, 2018
மன்னார், மடு நுழைவாயில் பகுதியில் புத்தர்சிலை வைப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என வன்னி இராணுவக் கூட்டுப்படை தள அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
வவுனியா – மன்னார் வீதியில் உள்ள மடு நுழைவாயில் பகுதியில் காணப்படும் அரச மரத்தின் கீழ் இராணுவத்தால் புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்தியினை வெளியிட்டிருந்தன.
ஆனால், இராணுவத்தால் அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறான எண்ணம் கூட எம்மிடம் இல்லை என வன்னி இராணுவக் கூட்டுப்படைத்தள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஆள் அடையாள அட்டையின்றி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை - மஹிந்த தேசப்பிரிய !
மார்பகப் புற்றுநோயால் அதிகமான பெண்கள் பாதிப்பு!
உற்பத்திதுறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் - யாழ்ப்பாண வணிக கழகம் தெரிவிப்பு!
|
|
|


