புதிய பயங்கரவாதச் சட்டம்: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குப் பாதிப்பு!

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் இரகசியத் தகவல்களைப் பெறுவதற்காக சட்ட விரோதமான ஏற்றுக் கொள்ளப்படாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக திட்டமிடுபவருக்கு வழங்குவதற்காக இரகசிய தகவல்களை நேரடியாகப் பெற முயல்வதும் குற்றம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் பொதுப் பாதுகாப்பின் அடிப்படையில் தகவல்களை மறைக்க முடியாது என்று தெரிவித்திருந்தது. தேசிய பாதுகாப்பு, தேசத்தின் பாதுப்பு ஆகிய காரணங்களுக்காக மாத்திரமே தகவல்களை வழங்க மறுக்கலாம் என்று அந்தச் சட்டம் தெரிவித்திருந்தது. ஆனால் இவற்றுக்கு முரணாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் சரத்துக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|