புதிய அரசியலமைப்புச் சட்டவரைபு நாடாளுமன்று வருவதில் தாமதம்!

Sunday, September 10th, 2017

புதிய அரசியலமைப்புச் சட்டவரைவு தொடர்பாக இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட நிலைப்பாடுகளை கொண்டுள்ளதால், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்புச் சட்டவரைவை எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செயய் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அன்றைய தினம் முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையாக கூடவுள்ளது.எனினும் புதிய அரசியலமைப்புச் சட்டவரைவு தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளிடையே இணக்கப்பாடுகள் இல்லாத காரணத்தினால், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது தாமதமாகும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை சம்பந்தமாக இருந்து வரும் கருத்து முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவும் இல்லை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாடுகளை அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி சில விடயங்கள் சம்பந்தமாக தெளிவான நிலைப்பாடுகளை முன்வைக்கவில்லை என அரசியலமைப்புச் சட்டவாக்க நடவடிக்கை குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதனால், புதிய அரசியலமைப்புச் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது தாமதமாகும் என அவர் கூறியுள்ளார்

Related posts: