பிரான்ஸ் சிறுவனின் மரணத்தினால் இலங்கைக்கு நெருக்கடி!

Tuesday, October 24th, 2017

கடந்த திங்கட்கிழமை பிரான்சில் 10 வயது பாடசாலை மாணவர் ஒரு உயிரிழந்த செய்தி சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகியிருந்தது.

இந்த மாணவர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகைத்தந்திருந்தார். இதன்போது தெற்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் சிறுவன் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.

இதன்போது திக்வெல கடலில் சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது நாய் ஒன்று அவரை கடித்துள்ளது, எனினும் அதற்காக சிகிச்சை மேற்கொள்ளாமல் அவர் பிரான்ஸ் நோக்கி சென்றுள்ளளனர்.அங்கு சென்ற போதே சிறுவனை கடித்த நாய் பைத்தியம் பிடித்திருந்ததாக தெரியவந்துள்ளது.

திடீரென ஆபத்தான நிலைமைக்கு சென்ற சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் ஆபத்தான கட்டத்திற்கு சென்றவர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார்.பிரான்சில் 99 வருடங்களின் பின்னர் இவ்வாறு நாய் கடித்து முதல் முறையாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சிறுவன் சென்ற பாடசாலை மாணவர்களுக்கு குறித்த நோய் விஷம் தொற்றாமல் இருப்பதற்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. திக்வெலக்க ஹோட்டல் நிர்வாகம் முழுமையாக தடைப்பட்டுள்ளதாகவும், மக்கள் பிரதிநிதி ஒருவர் இல்லாமையே அதற்கு காரணம் என குறித்த ஹோட்டல் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Related posts: