பிரதமர் ரணில் சீனா பயணம்!
Saturday, May 6th, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனாவிற்கு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சீனா செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு தலைவர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமருடன் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, நிரோஷன் பெரேரா மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் செல்ல உள்ளனர். எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகின்ற நிலையில் மறுநாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!
மூன்று வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கம்!
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சர்வதேச ஊடகங்கள் தகவல்’!
|
|
|


