பிரதமர் பதவிக்கு இருமுனைப் போட்டி?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பிரதமர் பதவிக்கு இருமுனைப் போட்டி நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பிரதமர் பதவிக்காக முன்னதாக நிமால் சிறிபால டி சில்வாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தற்போது பிரதமர் பதவிக்கு சுசில் பிரேமஜயந்தவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரைவையின் சில பதவிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சராக ஜோன் செனவிரட்ன, அரச நிர்வாக அமைச்சராக சரத் அமுனுகம ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
தேசிய அரசாங்கம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகியுள்ள நிலையில், அரசியல் அமைப்பின் 19ம் திருத்தச் சட்டத்தின் 40சீ சரத்தின் அடிப்படையில் புதிய பிரதமர், புதிய அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் அமைப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நேரடி பங்களிப்பினை வழங்கப் போவதில்லை.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை பலத்தை மலினப்படுத்துவதற்கு பொதுஜன முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து துமிந்த திஸாநாயக்கவை நீக்குமாறு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|