நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அவசியம் தேவை – பிரதமர்

Tuesday, July 4th, 2017

நாட்டுக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டுவருவதற்காக தேவையான அடிப்படை நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்ளாவிட்டால், அபிவிருத்தி பொருளாதாரம் குறித்து சிந்திக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான முதலீட்டு சூழலை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

இலங்கைக்கான முதலீடுகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் தொடர்பிலான உத்தியோக பூர்வ நிகழ்வு, நேற்று பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இலங்கை 2020ஆம் ஆண்டில் வர்த்தக இலகுப்படுத்தலின் உலக தரவரிசையில் 70வது இடத்தை பெறுவது, இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்

Related posts: