நிலக் கண்ணிவெடி தடை அமைப்பு இலங்கைக்கு பாராட்டு!

Sunday, December 24th, 2017

நிலக்கன்னிவெடி தடை தொடர்பான அமைப்பு நாடுகளின் மாநாட்டில் இலங்கை வரவேற்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் நிலக்கன்னிவெடி எதிர்ப்புக்கான பிரகடனத்தில் இலங்கை 163வது நாடாக கைச்சாத்திட்டுள்ளது.

இதனை முன்னிட்டு வியட்னாமில் நடைபெற்ற இந்த அமைப்புகளின் மாநாட்டில் இலங்கை இவ்வாறு வரவேற்றக்கப்பட்டது.

கடந்த 18 ஆம் திகதி வியட்நாமில் ஆரம்பமான இந்த மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த மாநாடு கன்னிவெடி தடை மற்றும் ஒஸ்ரியாவின் வெளிநாட்டு அலுவல் அமைச்சரான Thomas Hajnoczi  இலங்கையின் நடவடிக்கையை வரவேற்றார்.

முன்னொரு போதும் இல்லாத இலங்கையின் வளர்ச்சியாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த அமைப்பின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: