நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் – பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா!

Monday, June 19th, 2017

புதிய அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்பில் திருத்தங்களை செய்வது போனதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை முறை ஒழிக்கப்படுவதை எதிர்த்து வருகிறது.அத்துடன் தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த கட்சி கூறி வருகிறது.

Related posts:

அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்...
இன்றுமுதல் மேலும் 10,000 பட்டதாரிகளிற்கு அரச நியமனம் - அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைமையில் மாற்றம் ஏற்படுத்த அவதானம் - இராஜாங்க அமைச்சர் பிய...