நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் – பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா!

Monday, June 19th, 2017

புதிய அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்பில் திருத்தங்களை செய்வது போனதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை முறை ஒழிக்கப்படுவதை எதிர்த்து வருகிறது.அத்துடன் தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த கட்சி கூறி வருகிறது.

Related posts:


17 ஆயிரம் பேருந்து உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம் - இராஜாங்க அ...
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான உதவிகளை வழங்க பாகிஸ்தானும் உதவிக் கரம் – ஜனாதிபதியிடம...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்ப்பு - தேர்தல்கள் ஆ...