நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!
Friday, May 14th, 2021
சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மாவட்டத்திலும், 100 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள்...
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!
சிறுவர்கள் படுக்கைக்குச் செல்ல அரை மணி நேரத்திற்கு முன் அவர்களை கணினியிலிருந்து விலக்கி வைக்கவும்!
|
|
|


