நாட்டின் அதிகராத்தினை தமிழனுக்கு வழங்குங்கள் – மெதகொட அபேதிஸ்ஸ தேரர்!

Thursday, October 26th, 2017

சிறுபான்மை இன ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை யாருக்கு வேண்டுமானாலும் பொறுப்பேற்கலாம். ஆனால் நாட்டை பிரிக்க முடியாது. சிறுபான்மையினராக இருந்தாலும் வாக்குப்பலத்தால் இந்நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ பதவியேற்கலாம்.

இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் தமது அதிகாரங்களை கைவிட்டு தமிழ் தலைவர் ஒருவருக்கு முழு அதிகாரத்தையும் வழங்குங்கள். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.இந்த நாட்டில் தமிழ் தலைவர் ஒருவரோ அல்லது முஸ்லிம் தலைவர் ஒருவரோ நியமிக்கப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பல்ல. ஆனால் எமக்குள்ள பிரச்சினை இந்த நாட்டை பிராந்தியங்களாக பிரித்து நாசமாக்குவது தொடர்பிலேயே ஆகும்.

இந்நாட்டில் சுதந்திர போராட்டத்தின் போது சிங்கள மக்கள் மாத்திரம் அல்லாது ஏனைய சமூகத்தினரும் சேர்ந்தே பாடுபட்டார்கள். அதேபோல் இந்நாட்டில் சிங்களம் அல்லாத காரணத்தால் எவராவது ஒரு நபருக்கு சிங்களவர்கள் அனுபவிக்கும் எந்தவொரு வரப்பிரசாங்களாவது கிடைக்காதிருந்தால் அதனை அவர்களுக்கு வழங்க நாங்கள் தயார்..” எனவும் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: