நல்லிணக்கத்தைக் குழப்புவோர் படை முகாமுக்குள் நுழையத் தடை – இராணுவம்!
Tuesday, July 10th, 2018
நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று இலங்கை இராணுவம் முடிவு செய்துள்ளது.
அத்தகையவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம்இ அல்லது அத்தகைய நிகழ்வுகளுக்கு உதவ வேண்டாம் அல்லது அனுசரணை வழங்க வேண்டாம் என்று இராணுவம் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.
சில அரசியல்வாதிகள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களும் கூட இலங்கை அரசின் நல்லிணக்க செயல்முறைகளை விமர்சித்து வருகின்றனர். இதுவே இலங்கை இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளதற்கான காரணம் என்று கூறப்படுகின்றது.
தீவிரவாதிகளையும் அவர்களின் செயல்களையும் பாராட்டி சிலர் உரையாற்றுகின்றமை வடக்கு – கிழக்கில் அமைதியை விரும்பும் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது என்றும் அவர்களின் செயற்பாடுகள் மக்களை மீண்டும் போருக்குள் தள்ளுவதாக இருக்கிறது என்றும் இலங்கை இராணுவம் கூறியுள்ளது.
இலங்கை இராணுவம் நல்லிணக்க பொறிமுறைக்கு முக்கிய பங்காற்றி வருவதாகவும் வடக்கு – கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினைகளுக்கு தம்மால் தீர்வை வழங்க முடிந்துள்ளது என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|
|


