நல்லாட்சி அரசு தொடர உதவுங்கள் மோடியிடம் சம்பந்தன் வேண்டுகோள்   

Wednesday, May 17th, 2017

ஐதேக-ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்த தற்போதைய  ஆட்சி தொடர்வதை உறுதி செய்ய இந்தியா உதவ வேண்டும் என்று, தான் இந்திய பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரவித்துள்ளார்.

இந்திய பிரதமர் கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்தபோதே இந்தக் கோரிக்கையை தாம் நேரடியாக அவரிடம் விடுத்ததாக  சம்பந்தர்  தி ஐலண்ட் ஆங்கிலப் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுக்  கிடையிலான வேறுபாடுகளைச் சுருக்கி நாட்டு நலன்கருதி சிந்திக்காவிடில் குறித்த இலக்கை அடைய முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

நாட்டின் தற்போதைய நிலை குறித்து இந்திய பிரதமருக்கு விளக்கியுள்ளேன். தற்போதைய அரசாங்கம் தனது நல்லாட்சியையும் அதன்  திட்டங்களையும்  தொடர்வதற்கு இந்திய அரசாங்கம்   உதவிபுரியும் என்றும் சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்,

 அரசாங்கத்திற்குள் ஒற்றுமையில்லாவிட்டால்  நாம் முன்னோக்கி நகர முடியாது என்பதை நாம் மறக்கக்கூடாது. இந்த அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கமீதும் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அவர்களின் பாதையில் தடைகள் உள்ளபோதும் முன்னோக்கி நகர்வார்கள் என்று நம்புகிறோம்.  இந்த நாட்டைப் பிரிக்காமல் அதிகாரப்பகிர்வை அவர்கள் வழங்குவார்கள் என்றும் நாம் நினைக்கிறோம் எனவும் தெரவித்தார் சம்பந்தர்.

Related posts:

பருவகால நெற் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன - அமைச்...
தமது கொள்கைகளை அமுலாக்க அடுத்து 3 ஆண்டுகள் மட்டுமன்றி மேலும் 5 ஆண்டுகள் உள்ளன – ஜனாதிபதி கோட்டபய ராஜ...
மக்கள் வெளிநாட்டுகளுக்கு செல்வது பிரச்சினைக்குரிய விடயமல்ல - வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!