நம்பிக்கையில்லா பிரேரணை இன்று மீளப் பெறப்படுமா?

Tuesday, June 20th, 2017

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்றையதினம் மீளப்பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வடக்கின் மதத்தலைவர்கள் முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்க ஏதுவாக அமைந்த காரணிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் இணக்கப்பாட்டுக்கு வந்தனர்

இருவருக்கும் இடையிலான கடிதத் தொடர்புகளின் பிரகாரம், விசாரணைகளில் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோருக்கான கட்டாய விடுமுறை உத்தரவை மீளப்பெறுவதற்கு முதலமைச்சர் இணங்கினார்

இதன்படி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீளப்பெறப்படும் என்ற உறுதியை இரா.சம்பந்தன் வழங்கியதுடன், குறித்த அமைச்சர்கள் மீதான புதிய விசாரணையில் அவர்கள் தலையீடு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துவதாகவும் உறுதியளித்தார்இந்த நிலையில் வடமாகாண ஆளுனரிடம் முன்வைக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்றையதினம் உத்தியோகபூர்வமாக மீளப்பெறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related posts: