நடப்பு வருடத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்!
Monday, August 13th, 2018
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 33 ஆயிரத்து 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் தொற்று காரணமாக மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பு மாவட்டத்தில் 6416 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 3281 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2121 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த வருடம் இதுவரையிலான காலப்பகுதியில் மலேரியா தொற்று காரணமாக இதுவரை 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் நான்கு பேர் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தொற்று நோய் தடுப்பு பிரிவின் கொழும்பு பிரதான அலுவலகத்தின் வைத்திய அதிகாரி மனோநாத் மாரசிங்க தெரிவித்தார்.
Related posts:
நான்கு பேருக்கு கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் மர்மம்: ஆபத்து என எச்சரிக்கை செய்கிறது இலங்கை அரச வைத்திய...
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள் !
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் உரிய பயனாளிகளிடம் கையளிப்பு!
|
|
|


