தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான, முன்னணி சுயாதீன ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பதவி ஜனாதிபதிக்கு!

Monday, March 5th, 2018

உலக சுகாதார அமைப்பிற்கு உட்பட்ட, தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான, முன்னணி சுயாதீன ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான துணைத் தலைவர் பதவிகள் ஐந்து வழங்கப்பட்டுள்ளன. பின்லாந்து ஜனாதிபதி, உருகுவே ஜனாதிபதி, ரஷ்ய சுகாதார அமைச்சர் மற்றும் பாகிஸ்தானில் ஓய்வு பெற்ற அமைச்சருக்கும், இந்தத் துணைத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துணைத் தலைவர் பதவிக்கான அனைத்துப் பணிகளையும் முன்னெடுப்பதற்கான பொறுப்பை சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கியுள்ளார்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்கை வெற்றி கொள்ளும் போது, தொற்றாநோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிபார்சுகளை முன்வைப்பதே சுயாதீன ஆணைக்குழுவிற்கு உள்ள பொறுப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: