தேர்தலன்று வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்கத் தவறினால் கடும் நடவடிக்கை – ஆணைக்குழு !

Thursday, February 1st, 2018

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களுக்கான விடுமுறையை வழங்கத் தவறும் நறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

எதிர்வரும் 10 ம் திகதி இடம் பெறவுள்ள உள்@ராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது நிறுவன ஊழியர்களின் கடிதத்தின் ஊடாக விடுமுறை கோரும் பட்சத்தில் தமது  நிறுவனம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது வாக்காளருக்கு விடுமுறை அளிப்பது தொடர்பில் வாக்காளர் பணியாற்றும் நிறுவனத்திற்கும் வாக்களிக்கும் நிலையத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையிலான விடுமுறையை வழங்க வேண்டும்.அவ்வாறு விடுமுறை வழங்கத் தவறும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் அந்நிறுவனத்திற்கு எதிராக 500 ரூபாவிற்கு அதிகரித்த வகையிலான தண்டப்பணமும் ஒரு மாத கால சிறைத்தண்டனையும் வழங்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Related posts: