தேசிய வைத்திய சபைக்கான புதிய சட்டமூலம் !
Sunday, February 18th, 2018
ஆயுர்வேத வைத்தியத்துறையை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
ஆயுர்வேத வைத்திய பேரவையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக புதிய உள்ளூர் வைத்திய சபை தொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது.
தற்போது தேசிய வைத்திய முறைகள் இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்துள்ளன. ஆயுர்வேத சட்டமூலத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் இந்தவைத்திய சபை சமகாலத்தில் தேசிய வைத்திய சேவையில் வைத்தியர்களை பதிவு செய்தல், மேற்பார்வையிடுதல், அவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை கட்டுப்படுத்தல்போன்ற செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சர்வஜன வாக்கெடுப்பு நடத்த தேர்தல்கள் திணைக்களம் தயார் நிலையில் – மகிந்த
திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றிற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ...
யுத்தம் தொடர்பில் ஐ.நா தலையிட முடியாது - ரியர் அட்மிரல் சரத் வீரசேகர!
|
|
|


