தேசிய பாடசாலைகளின எண்ணிக்கையை 1,500 ஆக அதிகரிப்பதந்கு நடவடிக்கை!

Sunday, December 31st, 2017

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,500 வரையில் அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் திட்டமிட்டுள்ள நிலையில் அவரின் அறிவுறுத்தலுக்கேற்ப அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

தற்போது நாடெங்கும் 353 தேசிய பாடசாலைகள் மட்டுமே உள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கையை நான்கு மடங்குகளுக்கு மேலாக 1,500 வரையில் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் எனவும் இதற்காக நாடெங்குமுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள் பற்றிய தகவல்களும் திரட்டப்பட்டு அவற்றின் தராதரங்களுக்கு ஏற்ப 1,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தேசிய பாடசாலைகளின் தரத்துக்கு உயர்த்தப்படும் எனவும் கல்வி அமைச்சு தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தேசிய பாடசாலைகளாகத் தெரிவு செய்யப்படுவதற்காக ஏனைய அரசாங்க பாடசாலைகளின் தராதரங்கள் பற்றி ஆராய்வதற்காக அமைச்சரின் அறிவுறுத்தலுக்கேற்ப உயர் கல்வி அதிகாரிகள் அடங்கிய விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்  இவ்வாறு தேசிய பாடசாலைகளாக உயர்த்தப்படக்கூடிய பாடசாலைகள் பற்றிய பட்டியலொன்றை விரைவில் தயாhரிக்கப்பட்டு அமைச்கர்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: