தேசிய கொடியை ஏற்ற மறுத்தது அரசியலமைப்புக்கு முரணானது – சர்வேஸ்வரன் செயல்குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

Saturday, November 18th, 2017

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் இலங்கை தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருப்பது அரசியலமைப்புக்கு முரணானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்

நாட்டிலுள்ள மாகாண சபைகளின் அமைச்சர்கள் அரசியலமைப்பை ஏற்பதாகவே உறுதிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறான நிலையில், தேசியக் கொடியை ஏற்றாது, அதனை புறக்கணித்திருப்பதனூடாக அந்த அமைச்சர் அரசியலமைப்பை மீறியுள்ளதாக அவர் கூட்டிக்காட்டியுள்ளார்

தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை நல்லிணக்கம் என்பன தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் ஜெனிவாவிடம் கூறுகிறார். எனினும், அவரின் கீழ் உள்ள அமைச்சர் ஒருவர் தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை, நல்லிணக்கம் என்பனவற்றுக்கு எதிராக செயற்பட்டுள்ளார்.

தேசிய கொடிக்கு இவ்வாறு அவமதிப்பு ஏற்படுத்தப்படுமாயின், அதற்கு முதலமைச்சர் முதலில் பொறுப்புக் கூறவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி இந்த விடயம் தொடர்பில் உடன் விசாரணை ஒன்றைய நடத்தும் கடப்பாடு வட மாகாண ஆளுநருக்கு இருப்பதாகவும் பிரதிபா மஹாநாமஹேவாந குறிப்பிட்டுள்ளார்.

Related posts: