தேசிய இறைவரிச் சட்டமூலம் மீது நாளை வாக்கெடுப்பு!

Wednesday, September 6th, 2017

தேசிய இறைவரிச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நாளை நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் முற்பகல் 10.30 மணிமுதல் இரவு 7.30 மணி வரை சபை அமர்வு இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் முதல் வாரத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை ஆரம்பமாகின்றது

இந்நிலையில், நாளை மறுதினமே காலை முதல் மாலை வரை மேற்படி சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது. அதன் பின்னர் குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்கள் முன்வைக்கப்படும்.இந்தச் சட்டமூலத்திலுள்ள சில சரத்துகள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், மேலும் சில திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.எனவேதான், சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிகோலும் சரத்துகளை நீக்கி விட்டு திருத்தங்களுடன் அதை நிறைவேற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.நாடாளுமன்றம் முற்பகல் 10.30 மணிக்கு கூடினால் மாலை 6.30ற்குள் ஒத்திவைக்கப்படும். அதன் பின்னர் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும். முக்கிய நேரங்களிலேயே நள்ளிரவு வரை அமர்வு நடத்தப்படும்.நாளை மறுதினம் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் இல்லை. இருந்தும் முற்பகல் 10.30 மணி முதல் 7.30 மணி வரை சபை அமர்வு இடம்பெறவுள்ளது. இதன்மூலம் மேற்படி சட்டமூலத்தின் முக்கியத்துவத்தை உணரக்கூடியதாக இருக்கின்றது

Related posts: