தலைமன்னாரில் காணாமல் போன படகு புங்குடுதீவில் மீட்பு!
Tuesday, June 12th, 2018
தலைமன்னாரில் இரு மீனவர்களுடன் காணாமல் போன படகு நேற்றையதினம் புங்குடுதீவில் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி தலைமன்னார் ஊருமனைப் பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர். அவர்கள் பயணித்த படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று நேற்றையதினம் புங்குடுதீவு தெற்கு ஆஸ்பத்திரியடி துறைப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்கள் தொடர்ந்தும் கடற்பரப்புகளில் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த பெண் , யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்க...
சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் !
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையில் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு...
|
|
|


