ஜே.வி.பி அரசுக்கு எச்சரிக்கை!
Wednesday, October 4th, 2017
அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வொன்றை தராவிடின் நாடு முழுவதிலும் தொழிற்சங்கங்களது ஆதரவுடன் பாரிய போராட்டங்களை செய்யவுள்ளதாக ஜே.வி.பி அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நிலையில் ஜே.வி.பி இதனை வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
90 ஆண்டுகளுக்கு பின்னர் உலக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!
இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவவகாரம் - சேனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய விசேட தெரிவுக்குழுவை ந...
|
|
|


