ஜனாதிபதி மாளிகை விருந்தில் மௌனம் காத்த இராஜதந்திரிகள்

Saturday, May 13th, 2017

சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று கொழும்பில் தரித்து நிற்பதற்க்கான அனுமதி மறுக்கப்பட்டுளது .இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி இலங்கையில் நிற்கும் பொது சீன அரசினால் விடுக்கபட்ட இந்தக் கோரிக்கை  அரசினால் நிராகரிக்கப் பட்டதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிராகரிப்புக்கான இலங்கையின் உத்தியோகபூர்வ’காரணம் எதுவும் நேற்று வெள்ளி மாலை வரை வெளியிடப் படவில்லை.அதேவேளை நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி மாளிககையில் ஜனாதபதி மைத்திரி பால சிறிசேன அளித்த சிறப்பு விருந்தின் போது இரு தலைவர்களும் விவாதித்த விஷயங்கள் தொடர்பில்  விருந்தில் கலந்து கொண்ட உயர்மட்ட இராஜதந்திரிகள் அமைதி காத்தனர் எனவும் அந்த செய்தி தெரிவித்தது. எவ்வாறெனினும், இலங்கை, இந்தியா மற்றும் சீனா தொடர்பான முக்கிய பூகோள-அரசியல் விவகாரங்கள் பல அந்த விருந்தின் போது பேசப் பட்டதாகவும் அறிய முடிகிறது .

Related posts: