ஜனாதிபதியின் தீர்மானம் பிற்போடப்பட்டது!

Wednesday, October 25th, 2017

சர்ச்சைக்கரிய மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் மருத்துவக் கல்லூரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களும், மருத்துவத்துறையினரும் நீண்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மறுபுறத்தில் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்கள் பலரும் சைட்டம் மருத்துக் கல்லூரிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர்.இதன் காரணமாக சைட்டம் தொடர்பாக தீர்மானமொன்றை மேற்கொள்வதில் அரசாங்கத்துக்கு பெரும் சிக்கல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சைட்டம் கல்லூரி மருத்துவக் கல்லூரி தொடர்பாக ஜனாதிபதியின் தீர்மானத்தை இருதரப்பும் நாடியிருந்தனர்.அது தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானம் நேற்று(23) வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், குறித்த தீர்மானத்தை இன்னும் இரண்டு நாட்கள் கழித்தே வெளியிடவுள்ளதாக தற்போது ஜனாதிபதி அறிவித்துள்ளார்

Related posts:

கொரோனா வைரஸ்: முக பாதுகாப்பு கவசம் அணியும் அளவிற்கு இலங்கையில் தாக்கம் இல்லை - அரச வைத்திய அதிகாரிக...
‘அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டில் வளரும் மரம்’ எனும் தொனிப்பொருளில் கடற்றொழில் நீரியல் வளமூல அமைச்...
மழையுடனான வானிலை இன்றுடன் குறைவடைந்தாலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும் - ...