சீனா – இலங்கை உறவுகள் வலுக்கும்!

Sunday, October 29th, 2017

சீனாவுடனான உறவுகளை மென்மேலும் வலுப்படுத்திக் கொள்ள இலங்கை விருப்பம் கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சீனாவின் ஜனாதிபதி சீ ஜின்பிங் இரண்டாவது தடவையாகவும் அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யபட்டுள்ளார்.

இதனையொட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சீன ஜனாதிபதிக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.குறித்த வாழ்த்துச் செய்தியிலேயே சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதியின் இரண்டாம் தவணை பதவிக்காலத்தில் முன்னரை விடவும், இருநாட்டு உறவுகளும் பலப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் இந்த வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:


இலங்கையில் பல்வேறு சமூகத்தினர் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு நேரடி காரணம் வெளிநாட்டு சக்திக...
எதிர்வரம் வாரத்தில் சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப...
மூன்று மாதங்களில் 108 பில்லியன் வருமானம் - தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்...