சீனாவின் சர்வதேசப் பாதை இலங்கையும் இணைகிறது

Wednesday, May 17th, 2017

இலங்கையை இந்திய பெருங்கடலின் மையமாக மாற்றுவதற்கு சீனாவின் சர்வதேச வர்த்தக மூலோபாய திட்டத்திற்கு , எமது இணைப்பினையும் உந்துதலையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைப்பின் ஏற்பாட்டில் ஒரே வட்டம்  ஒரேவீதி என்னும் தொனிப்பொருளில்    சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றுவரும் மாநாட்டின் 2நாள் ஆவது அமர்வில் நேற்றைய தினம் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும்  திருகோணமலை ஆகிய மூன்று பிரதான துறைமுகங்களையும் கொழும்பு மற்றும் மத்தளன் ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்யும் பணிகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.

அவை அனைத்தும் உத்தேசிக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மையத்துடன் வீதி வழியாகவும்  தொடருந்துப் பாதை வழியாகவும் இணைக்கப்படவுள்ளன. இத்தகைய முன்முயற்சிகள் இலங்கையை கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் பொருட்களை இடமாற்றம் செய்வதற்கான மையமாக மாற்றும். வீதிகளை நிர்மாணித்தல், நீர்வழங்கல், மின்இணைப்பு மற்றும் இன்னபிற     மிகவும் அத்தியாவசியமான உட்கட்டுமானங்களின்மீதும் இலங்கை கூர்ந்து அவதானம் செலுத்தியுள்ளது’ என்றும் அவர் மேலும் கூறினார்.

அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்று கையில்,சீனாவின்  ‘ஒரே வட்டம்  ஒரேவீதி முயற்சியை   இலங்கையும் அதே திசையில் முன்னெடுப்பதானது  எமது முயற்சிக்குக் கிடைத்த வெகுமதியாகும். இவற்றில் ; ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமானநிலையம், மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அனேகமானவை  நவீன உட்கட்டுமானத் திட்டங்களாகும். இவைகளை நாம் எக்சிம் வங்கி போன்ற சீன நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்று முன்னெடுக்கின்றோம்’ என்று கூறினார்.

துறைமுக நகரை நிர்மாணிப்பதன் மூலம், இலங்கை கடலுக்கருகில் பொருளாதார இணைப்பை வலுப்படுத்தி வருகிறது. அது சினாவின் ஒரே வட்டம் ஒரே சாலை திட்டத்தின்கீழ முன்னெடுக்கப்படுகின்ற ஒரு றியல் எஸ்டேட் செயற்றிட்டமாகும்.

இத்தகைய நடவடிக்கைகள் முழுநாட்டையும் உலக மதிப்புச் சங்கிலியுடன் ஐக்கியப்படுத்தும் என்றும் அதனூடாக நான்காவது தெழிற் புரட்சியில் அதிக பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எதிர்வுகூறினார் பிரதமர்.

Related posts:

யாழ்ப்பாணத்தின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு – ஆபத்தான நிலைமை இல்லை என்கிறார் மருத்துவ...
வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் கட்டணம் 6500 ரூபா - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்த...
சதொசவிடமிருந்து சலுகை விலையில் புத்தாண்டு நிவாரணப் பொதி - இந்தியா வழங்கும் 40,000 மெட்ரிக் தொன் அரி...