சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க இடைநீக்கம்!

சுவிஸ் குமார் கொழும்புக்கு தப்பிச் செல்வதற்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடை நீக்கம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியினை வழங்கியுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார், கொழும்புக்கு தப்பிச் செல்வதற்கு காரணமாக இருந்தக் குற்றச்சாட்டில், அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த காவற்துறை அதிகாரியின் பதவியை இடை நீக்கம் செய்யுமாறு காவற்துறை மா அதிபர், காவற்துறை ஆணைகுழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைய, அவர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பு!
‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று இனியும் அழைப்பது தவறு - கரு ஜயசூரிய தெரிவிப்பு!
மார்சுக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
|
|