சாதாரணதரப் பரீட்சைக் கால இரவு நேர கண்காணிப்பை அதிகரிக்குமாறு பணிப்பு!

Sunday, December 17th, 2017

நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் போது இரவு நேர கண்காணிப்பை அதிகரிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களையும் கேட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித அறிவித்துள்ளார்.

விசேடமாக மேற்படி பரீட்சையின் கணித, விஞ்ஞானப் பாடங்கள் நடைபெறும் காலப் பகுதியில் பரீட்சை இணைப்பு நிலையங்கள், பிராந்திய சேகரிப்பு நிலையங்கள் உட்பட பரீட்சை மண்டபங்கள் மீது இரவு நேர மேற்பார்வை மற்றும் திடீர் கண்காணிப்புக்களை மேற்கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான மேற்படி பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. புதிய பாடத்திட்டம், பழைய பாடத்திட்டம் என இரண்டு வகையாக மேற்படி பரீட்சை நடைபெற்று வருகிறது.

மேற்படி பரீட்சையில் சுமார் ஆறு இலட்சத்திற்கு சற்று அதிகமானோர் தோற்றுகின்றனர்.

முன்னரை விட இம்முறை பரீட்சை மண்டபங்களின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மேற்படி பரீட்சையில் இரு ஆள் மாறாட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆள் மாறாட்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் நேரடியாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Related posts: