சம்பள முரண்பாடுகளைத் தீர்க்குமாறு கோரும் உடற்கல்வி ஆசிரியர்கள்!

Wednesday, October 4th, 2017

உடற்கல்வி ஆசிரியர் வேதனத்திலுள்ள மாறுபாடுகளால் வடக்கில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளமட்ட வேறுபாடுகளால் பாதிக்கப்பட்ட எமக்கு நிவாரணம் பெற்றுத்தர வடக்குமாகாண உடற்கல்வி ஆசிரியர் சங்கத் தலைவர் ப. தர்மகுமாரன் முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியர்கள் டிப்ளோமா சான்றிதழுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தருமாறு சங்கத்திடம் கோரிக்கை எனும் விடயக் கோரிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உடற்கல்வி டிப்ளோமா பட்டதைப் பெற்று ஆசிரிய நியமனம் பெற்றவர்களின் ஒரு பகுதியினர் இரண்டு வருட டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள், மூன்று வருட டிப்ளோமாப் பட்டம் பெற்றவர்கள் என உள்ளனர்.

இரண்டு வருட டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் என்.வி.கியு தரம் 6 இல் உள்ளதால் ஆசிரியர் சம்பளத் திரட்டு வகுப்பு 3 தரம் 1(இ) இல் ஆரம்ப சம்பளத்தைப் பெறத் தகுதியுடையவர்கள். அதே போல மூன்று வருட டிப்ளோமா பட்டத்தைப் பெற்றவர்கள் என்.வி.கியு தரம் 7 இல் உள்ளதால் ஆசிரிய சம்பளத் திரட்டு வகுப்பு  3 தரம் 1(ஆ) பகுதியில் உள்வாங்கப்பட வேண்டியவர்கள்.

எனினும் 2 வருட, 3வருட டிப்ளோமாப் பட்டங்களை உடைய உடற்கல்வி ஆசிரியர்கள் எவரும் உரிய சம்பள படி நிலைகளில் வைக்கப்படாது அலைக்கிக்கப்படுகின்றனர். எனவே உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் உரிய தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சம்பள நிலை ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து உரிய படிநிலைகளில் வைக்க மாகாணக் கல்வி அதிகாரிகள், செயலாளர்கள், மாகாண உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related posts: