சட்டத்தின் ஆட்சி பட்டியலில் இலங்கைக்கு 68 ஆவது இடம்!

Tuesday, May 9th, 2017

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 68 ஆவது இடத்தினை பெற்றுள்ளதாக உலக நீதி திட்டத்தின் சட்ட ஆட்சி சுட்டி – 2016  வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது

சாதாரண மக்களின் அனுபவங்கள், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், ஊழல், இலஞ்சம், குற்றம் மற்றும் நீதியைப் பெறுதல் தொடர்பான மக்களின் உணர்வுகளின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சட்ட ஆட்சி தொடர்பான இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.113 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன், டென்மார்க் முதலிடத்திலும், நோர்வே இரண்டாவது இடத்திலும், பின்லாந்து மூன்றாமிடத்திலும் உள்ளன.

இதில் இலங்கை 68ஆவது இடத்தில் இருக்கின்றதுடன், தெற்காசிய நாடுகளில், நேபாளம் 63ஆவது இடத்திலும், இந்தியா 66ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 103ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 106 ஆவது இடத்திலும் இருக்கின்றன.இதேவேளை, இலங்கையில் ஊழல்கள் தொடர்பாக 42 வீதமானோர் தண்டிக்கப்படுகின்றதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ். பல்கலை கொரோனா சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள்...
மாதாந்த கூட்டத்தில் உபதவிசாளர் மேற்கொண்ட தீர்மானத்தில் தவறு – வலி மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்டத...
வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருங்கள் - பொதுமக்களிடம் சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை!