சட்டங்களை மீறினால் தேர்தல் ஒத்திவைக்கப்படும் – மஹிந்த!

Thursday, December 28th, 2017

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின் போது தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சம்பவங்கள் இடம்பெறுமானால் இரண்டு வாரங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

“..எந்தத் தொகுதியில் தேர்தல் வன்முறை நடக்கின்றதோ அந்தத் தொகுதிக்கான தேர்தலே இவ்வாறு இடைநிறுத்தப்படும். வாக்களிப்பு தினத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் வேட்பாளராலோ அல்லது ஆதரவாளராலோ தேர்தல் சட்டதிட்டங்கள் மீறப்படுமாக இருந்தால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும். அத்துடன், பெப்ரவரி 7ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டாலும் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும். இன்னும், நீதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். வேட்பாளரொருவர் தனது தொகுதியில் ஓர் அலுவலகத்தை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என்றும், பிரசார நடவடிக்கைகளுக்காக 7 அல்லது 15 பேரை மட்டுமே தம்முடன் இணைத்துக் கொள்ள முடியும்..” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

மாணவி வித்தியா கொலையாளிகளை பாதுகாத்தது விஜயகலா மகேஸ்வரனே - அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனா...
எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் இலங்கை பங்கேற்காது - இந்தியப் பெருங்கடலில் பிரச்சனைகள் வருவதையும் வி...
உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் - அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தாக க...