கோர விபத்து – கனடாவில் யாழ்ப்பாண பெண் பலி !
Saturday, November 4th, 2017
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்ற பெண் பலியாகியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ரொரன்டோ பகுதியிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.Toronto பகுதியில் உள்ள Steeles அவன்யூ பக்கத்தில் இருக்கும் W and Keele தெருவில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்தில் கலைச்செல்வி உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவரின் கழுத்து மற்றும் பின் பகுதியில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளி ஆரோக்கியமாக உள்ளார் - யாழ். போதனா வைத்தியசாலையின் பணி...
அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரத்தையும் ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது - அரச தலைவர் கோட்டாபய...
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை! !
|
|
|


