கொள்ளையர்கள் மூவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது!

Saturday, February 17th, 2018

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாவற்குளி பகுதியைச் சேர்ந்த 20 தொடக்கம் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்களிடம் இருந்து 2 உந்துருளிகள் உள்ளிட்ட பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.  விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த காவற்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts:

இரண்டு வருட நிவாரணத் திட்டம் உள்ளடங்கலாக ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவுசெலவு திட்டம் - பிரதமர் ரண...
திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைப்பு - அமைச்சர் க...
விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு IMF இன் நிறைவேற்றுச் சப...