குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று அமைச்சர்களிடம் விசாரணை?

Sunday, February 25th, 2018

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மூன்று முக்கிய அமைச்சர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரைவில் விசாரணை  நடத்த  உள்ளனர்.

இந்த அமைச்சர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் இரண்டு பேர் தற்போதைய அமைச்சரவையில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகிப்போர் என்பதுடன்  மற்றுமொருவர் முன்னாள் அமைச்சர் என கொழும்பு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.

மேலும் இவர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் மத்திய வங்கி பிணை முறி தீர்மானம் மிக்கதோர் கட்டத்தை அடைய முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Related posts: