கால்நடைகளின் குடிநீரைப் பூர்த்தி செய்ய தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்படும் – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் !
Friday, March 23rd, 2018
வரட்சியிலிருந்து கால்நடைகளைப் பாதுகாப்பதற்கு தண்ணீர்த் தொட்டிகளையும் நீர் நிலைகளையும் அமைக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சியினால் கால்நடைகளுக்கான குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும் ஏது நிலை காணப்படுவதையடுத்து மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மாவட்டத்தில் வாழும் மக்களினுடைய வாழ்வாதாரத்தில் பெரும் பகுதி கால்நடைகளில் தங்கியிருப்பதனால் வரட்சிக்காலங்களில் கால்நடைகள் மற்றும் ஏனைய விலங்குகளுக்கான குடிநீர் தேவையென்பது மிக முக்கியமானது.
அந்தவகையில் கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் தண்ணீர்த் தொட்டிகள் மற்றும் நீர்நிலைகளை உருவாக்கி அவற்றின் மூலம் இவ்வாறான கால்நடைகளுக்கான நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்கள் முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


