கச்சதீவில் முதன்முறையாக சிங்களத்தில் ஆராதனைகள்!

Wednesday, February 21st, 2018

கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில் இம்முறை சிங்களமொழியிலும் ஆராதனை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவிற்கு இம்முறை இலங்கையிலிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்தியாவிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் கச்சதீவு திருவிழாவில் முதல் முறையாக தமிழ்மொழியுடன் சிங்களமொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளது.

அந்த வகையில் சிங்களத்தில் திருப்பலி ஆராதனையை மேற்கொள்ள காலி மறை மாவட்ட ஆயர் ரேமன்ட் விக்ரமசிங்க வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த திருவிழாவிற்கு செல்லக்கூடிய பக்தர்களிடம் அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாளஅட்டை அவசியமாக இருக்கவேண்டும் எனவும் விழாவில் பங்கு கொள்வதற்கு இலங்கை அகதிகளுக்கு அனுமதி கிடையாது எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: