ஐரோப்பிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கை! 

Friday, February 9th, 2018

இலங்கை ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் பின்னர் இலங்கை, துனிசியா, ட்ரெனிடெட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் கறுப்பு பட்டியலில்உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் தயாரிக்கும் போது பணம் தூய்மையாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கியமை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பின் போது குறித்த பட்டியலுக்கு ஆதரவாக 357 வாக்குகளும் அதற்கு எதிராக 283 வாக்குகளும் கிடைத்துள்ளது. மேலும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: