எதிர்வரும் 2 மாத காலத்திற்குள் மாணவர்களுக்கான உத்தேச காப்புறுதி திட்டம் !

Sunday, June 25th, 2017

பாடசாலை மாணவர்களுக்கான உத்தேச காப்புறுதி திட்டத்தை அடுத்த இரண்டு மாத காலத்திற்குள் நடைமுபை்படுத்துவதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நோய் வாய்ப்பட்டால் அரச வைத்தியாசலை அல்லது தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்காக ஒரு இலட்சம் ரூபா வரையான காப்புறுதி அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்குவதாக கல்வியமைச்சர் கூறினார்.தெரணியகல பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts:


நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் திறக்கப்படும் - கல்வியமைச்சர் பேராசிர...
சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானம்!
பிரிவினைவாதத்தை தூண்ட சில புலம்பெயர் அமைப்புகள் முயற்சிக்கின்றன - வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெ...