ஊழலில் இந்தியாவை முந்தியது இலங்கை – ட்ரான்ஸ்பரன்சி இன்ரநஷனல்!

Saturday, March 24th, 2018

உலகில் நாடுகளின் ஊழல் நிலை தொடர்பான பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் ட்ரான்ஸ்பரன்சி இன்ரநஷனல் அமைப்பு கடந்த ஆண்டுக்கான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகில் உள்ள 180 நாடுகளில் நடைபெறும் ஊழல்களை அலசி ஆராய்ந்து தரவரிசைப்படுத்தி இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு வழங்கும் பொதுசேவை மற்றும் அரசு மட்டத்தில் நடைபெறும் ஊழல்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையை விட மிகக் குறைவாக ஊழல் நடக்கும் நாடாக இந்தியா தரப்படுத்தப்பட்டுள்ளது.

முதலிடத்தில் நியூசிலாந்தும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் மூன்றாம் இடத்தில் பின்லாந்து, நோர்வே, சுவிஸ் மூன்று நாடுகளும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டு இலங்கையில் ஊழல் அதிகரித்துள்ளதாக அந்தக் கணிப்பீட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

ஜூலை மாதம் 13, திகதிமுதல் 16 ஆம் திகதி வரை தபால் மூல வாக்கு பதிவு நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு...
யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா மனித உரிமை விசாரணை குழு ஆணையாளராக ஜனாதிபதியால் நிய...
பல நாடுகள் நிதியுதவி வழங்க இணக்கம் - இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மட்டம் அதிகரிக்கும் என ஆய்...