உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் கைச்சாத்திட்டுள்ளார் அமைச்சர் பைஷர் முஸ்தப்பா!
Wednesday, November 1st, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானியில் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் அமைச்சர் பைஷர் முஸ்தபா கைச்சாத்திட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் சற்றுமுன்னர் கைச்சாத்திட்டுள்ளார். இதனிடையே நுவரெலியா, அம்பகமுவ முதலான இரண்டு பிரதேசசபைகளை நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை மற்றும் மஸ்கெலியா என்ற மேலும் நான்கு பிரதேசசபைகளாக அதிகரிக்க நேற்றைய தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஆங்கிலமொழி மூலமான தனியார் முன்பள்ளிகளை வடக்கில் தடை செய்யுங்கள்
இலங்கைக்கு மற்றுமொரு ஆபத்து?
பெண்களின் வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்க அமெரிக்கா இணக்கம்!
|
|
|


