உள்ளூராட்சி சபைகளில் தெரிவுகள் எப்படி நடக்கும் ? சம வாக்குப் பெற்றால் குலுக்கல் முறையிலேயே தெரிவு !
Tuesday, March 27th, 2018
தொங்கு நிலை உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர் உப தவிசாளர்களைத் தெரிவு செய்வதற்கான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை வடக்கில் உள்ள 30 சபைகளிலும் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளன தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு எப்படி நடைபெறும் என்பது தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது –
முதலில் தவிசாளர் தெரிவு இடம் பெறும் தவிசாளர்களுக்குரிய பெயர்களை முன்மொழிந்து வழி மொழிய வேண்டும் ஒருவரது பெயர் மாத்திரம் பிரயோகிக்கப்பட்டால் அவரே அந்த சபையின் தவிசாளராக நியமிக்கப்படுவார் இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பெயர்கள் பிரேரிக்கப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும் வாக்கெடுக்கும் போது இரகசிய வாக்கெடுப்போ அல்லது பகிரங்க வாக்கெடுப்பா என்பதை சபையின் உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும் பெரும்பான்மையினர் எந்த வாக்கெடுப்பைக் கோருகின்றனரோ அதன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இரண்டு பேரிற்கு மேல் பேட்டியிட்டால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆகக் குறைந்த வாக்குப் பெற்றவர் நீக்கப்படுவார் அதன் போது போட்டியிம் ஒருவருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கப் பெற்றால் அவர் தவிசாளராக அறிவிக்கப்படுவார் ஆகக் குறைந்த வாக்கை இருவர் சமனாகப் பெற்றால் யாரை நீக்குவது என்பதற்கு குலுக்கல் இடம் பெறும் அதில் தெரிவாகுபவர் நீக்கப்படுவார் குறைந்த வாக்குகள் பெற்றுக் கொள்பவர்கள் படிப்படியாக நீக்கப்படுவார் தவிசாளர் பதவிக்கு இருவர் போட்டியிட்டு இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றுக் கொண்hல் குலுக்கல் முறையிலேயே தவிசாளர் தெரிவு செய்யப்படுவார்.
Related posts:
|
|
|


