உக்ரைனை ஒரு சகோதர தேசமாக தொடர்ந்து பார்க்கிறேன் – ரஷ்ய அதிபர் புடின் கருத்து!
Thursday, December 22nd, 2022
உக்ரைனில் நடந்த போருக்கு ரஷ்யா காரணம் அல்ல என தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், உக்ரைனை ஒரு சகோதர தேசமாக தொடர்ந்து பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மூத்த இராணுவ அதிகாரிகளுடன் தொலைக்காட்சியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உக்ரைனுடனான மோதல், மூன்றாம் நாடுகளின் கொள்கையின் விளைவு என்று ஜனாதிபதி புடின் சாடினார்.
உக்ரைனில் தொடங்கி சோவியத்துக்கு பிந்தைய குடியரசுகளை மேற்கு நாடுகள் மூளைச்சலவை செய்துள்ளதாக ஜனாதிபதி புடின் தனது உரையின் போது கூறினார்.
மேலும், இப்போது நடப்பது ஒரு சோகம் என்றாலும் அது தங்களின் தவறு அல்ல என புடின் குறிப்பிட்டார்.
கடன்கள் மற்றும் மலிவான எரிசக்தியை வழங்கி, அண்டை நாடுகளுடன் உறவுகளை உருவாக்க முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்கர் மரணம்!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நீதித்துறையை சவால் செய்யாது - அமைச்சர் கெஹெலிய ரம...
எரிபொருள் கிடைக்காவிடின் இன்றும் மின் துண்டிப்பு - இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
|
|
|


