இலங்கை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் பூர்த்தி – சர்வதேச நாணய நிதியம்!

Saturday, March 10th, 2018

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் கீழ், இலங்கை தொடர்பான நான்காவது மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த மாதம் 27ம் திகதி இலங்கைக்கு வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு, நேற்றைய தினம் தமது மீளாய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளது.

இந்த குழுவிற்கும் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் வொசிங்டனில் மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.  இதன்போது ஏற்கனவே 2016ம் ஆண்டு இணங்கிக் கொள்ளப்பட்டதன் பிரகாரம், நீடிக்கப்பட்ட நிதி வசதியளிப்பு உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு அடுத்தக்கட்ட கடன் தவணை வழங்குவது தொடர்பில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: