இலங்கை – தென்கொரியா இடையே பொருளாதார புரிந்துணர்வு!
Monday, June 11th, 2018
இலங்கை மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான பொருளாதார புரிந்துணர்வை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை பிரதிநிதிகளுக்கும், கொரிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையின் போது பாலம் அமைத்தல் மற்றும் ஆடைத் தயாரிப்பு தொழிற்துறைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இருநாடுகளும் உடன்பட்டுள்ளன.
அத்துடன் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் பல திட்டங்கள் மற்றும் வர்த்தக முதலீடுகள், விவசாயம், கடற்றொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன தொடர்பான புரிந்துணர்வு வேலைத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்காவுக்கான விஜயம், சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அல்ல - நித...
எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்...
விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் நாட்டை வந்தடைந்தது!
|
|
|
இலங்கை வரலாற்றில் உருவாகிய அரசாங்கங்களில் இதுவே மிகவும் பலமான அரசாங்கம் – ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கல...
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றுமுதல் ஆரம்பம் - பரீட்சைகள் தி...
சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் செப்டெம்பர் 20 ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெர...


